கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த ஹரிநாராயணன் என்பவரது பேத்தியான 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்தார்.
பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துவிட்டதாக ஹரிநாராயணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தையின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. காயமடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சரிகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை சரிகாவின் தந்தை காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story