பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலி - சித்தராமையா பதவி விலக கோரி பாஜக போராட்டம்

முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெங்களூரு ,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 3-ந்தேதி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியது. அதற்கு மறுநாள் (4-ந்தேதி) பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது. முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் , இச்சம்பவத்துக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டி வருகிறது இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சித்தராமையா, டி.கே. சிவக்குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.






