நீங்களும் ஆகலாம் கம்பெனி செகரட்டரி - விரிவான விவரங்களை காணலாம்
கம்பெனி செகரட்டரி படிப்பு, பணிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் தேர்வு விவரங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
"கம்பெனி செகரட்டரி" (Company Secretary) என அழைக்கப்படும் "நிறுவன செயலர்" பதவி ஒரு நிறுவனத்திலுள்ள மிக உயர்ந்த பதவி ஆகும். குறிப்பாக - அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் இந்த பதவியை பொறுப்புள்ள நிர்வாக பதவியாக பலரும் போற்றுகிறார்கள்.
வெளிநாடுகளில் கம்பெனி செகரட்டரி பதவியை "கார்ப்பரேட் செகரட்டரி" (Corporate Secretary) என்றும் அழைக்கிறார்கள். எந்தவொரு நிறுவனத்திலும் மிக சிறப்பான, திறமைமிகு நிர்வாகம் அமைவதற்கு அடித்தளம் அமைத்து, முக்கியமான பொறுப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்பவர் ஒரு நிறுவனத்தின் "கம்பெனி செகரட்டரி" என்பது எல்லோரும் அறிந்ததே.
நிறுவனத்தின் சட்டம் மற்றும் நிறுவனத்தை ஒழுங்குப்படுத்தும் நெறிமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும், நிறுவன இயக்குநர்கள் அந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கும் பக்கபலமாக இருப்பவர் கம்பெனி செகரட்டரிதான்.
நிறுவனத்தை சீரமைத்தல், இயக்குநர் குழுவின் கூட்டங்களை நடத்துதல், நிறுவனம் தொடர்பான முடிவுகள் மேற்கொள்ள உதவுதல், பங்குதாரர்கள் அல்லது அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிக்கைகளை அனுப்புதல் போன்றவை ஒரு கம்பெனி செகரட்டரியின் முக்கியப்பணிகளாகும். இவைகள் தவிர, பணியாளர்களின் நலன்களான ஓய்வூதியம், காப்பீடு, ஒப்பந்தங்கள், இடர்மேலாண்மை (Risk Management), சொத்துகளை நிர்வகித்தல் மற்றும் நிதிக்கணக்கு (Financial Accounts) குறித்து விளக்கங்களை உருவாக்குதல் ஆகியவை கம்பெனி செகரட்டரியின் இதர பணிகளாக கருதப்படுகிறது.
கம்பெனி செகரட்டரி - பணிகள்
கம்பெனி செகரட்டரி பணிகளை கீழ்க்கண்டவாறு பிரித்து கொள்ளலாம்.
1. கார்ப்பரேட் கவர்னன்ஸ் அன்ட் செகரட்டரியல் சர்வீசஸ் (Corporate Governance and Secretarial Services)
கார்ப்பரேட் கவர்னன்ஸ் சர்வீசஸ் (Corporate Governance Services)
கார்ப்பரேட் செகரட்டரியல் சர்வீசஸ் (Corporate Secretarial Services)
செகரட்டரியல் / காம்ப்ளையன்ஸ் ஆடிட் அன்ட் சர்டிபிகேசன் சர்வீசஸ் (Secretarial/Compliance Audit and Certification Services)
2. கார்ப்பரேட் லாஸ் அட்வைசரி அன்ட் ரெப்ரெசென்டேசன் சர்வீசஸ் (Corporate Laws Advisory and Representation Services)
கார்ப்பரேட் லாஸ் அட்வைசரி சர்வீசஸ் (Corporate Laws Advisory Services)
ரெப்ரெசென்டேசன் சர்வீசஸ் (Representation Services)
ஆர்பிட்ரேசன் அன்ட் கான்சிலியேசன் சர்வீசஸ் (Arbitration and Conciliation Services)
3. பைனான்சியல் மார்க்கெட் சர்வீசஸ் (Financial Market Services)
பப்ளிக் இஸ்யூ, லிஸ்டிங் அன்ட் செக்யூரிட்டிஸ் மேனேஜ்மெண்ட் (Public Issue, listing and Securities Management)
டேக்ஓவர் கோடு, இன்சைடர் டிரேடிங், மெர்ஜர்ஸ் அன்ட் அமால்கமேசன் (Takeover Code, Insider trading, Mergers and Amalgamation)
செக்யூரிட்டிஸ் காம்ப்ளையன்ஸ் அன்ட் சர்டிபிகேசன் சர்வீசஸ் (Securities Compliance and Certification Services)
பைனான்ஸ் அன்ட் அக்கவுண்டிங் சர்வீசஸ் (Finance and Accounting Services)
டேக்சேசன் சர்வீசஸ் (Taxation Services)
இன்டர்நேசனல் டிரேடு அன்ட் WTO சர்வீசஸ் (International Trade and WTO Services)
4. மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் (Management Services)
ஜெனரல்/ஸ்டிராடஜிக் மேனேஜ்மெண்ட் (General/ Strategic Management)
கார்ப்பரேட் கம்யூனிகேசன் அன்ட் பப்ளிக் ரிலேசன்ஸ் (Corporate Communication and Public Relations)
ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மெண்ட்; (Human Resources Management)
இன்பர்மேசன் டெக்னாலஜி (Information Technology)
வேலை வாய்ப்புகள்
கம்பெனி செகரட்டரி படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக - தலைமை செயல் அலுவலர் (Chief Executive Officer), மேலாண் இயக்குநர் (Managing Director), மேலாளர் (Manager), முழு நேர இயக்குநர் (Director), தலைமை நிதி அலுவலர் (Chief Finance Officer) ஆகிய உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் முக்கியப்பதவியான "கம்பெனி செகரட்டரி " பதவி இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கம்பெனி செகரட்டரி - படிப்பு
"கம்பெனி செகரட்டரி" படிப்பை, "இன்ஸ்டிட்டியூட்ஸ் ஆஃப் கம்பெனி செகரட்டரிஸ் ஆஃப் இந்தியா" (Institute of Company Secretaries of India) என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த படிப்பை யூனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிசன் (University Grants Commission) (UGC) பட்ட மேற்படிப்பிற்கு (Post Graduate Degree) இணையான தகுதியாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த படிப்பு 3 முக்கிய பிரிவுகளை கொண்டது. அவை -
1. பவுண்டேசன் புரோகிராம் (Foundation Programme)
2. எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (Executive Programme)
3. புரொபசனல் புரோகிராம் (Professional Programme)
- ஆகியவை ஆகும்.
1. பவுண்டேசன் புரோகிராம் (FOUNDATION PROGRAMME) பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அதற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த முதல் நிலை தேர்வை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
பிளஸ் 2 தேர்வில் கலை (Arts) அறிவியல் (Science) அல்லது வணிகவியல் (Commerce) பாடப்பிரிவினை தெரிந்தெடுத்து படித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். நுண்கலை (Fine Arts) பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தவர்கள் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பவுண்டேசன் புரோகிராம் தேர்வு ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்வை எழுதுபவர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். ஜூன் மாதம் தேர்வு எழுத விரும்புபவர்கள் முந்தைய ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2. எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (EXECUTIVE PROGRAMME)
பட்டப்படிப்பில் எந்த பாடப்பிரிவை விருப்ப பாடமாக தேர்ந்தெடுத்து, தேர்வில் வெற்றி பெற்றாலும் இந்த தேர்வை எழுதலாம். இருப்பினும், நுண்கலை பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தவர்கள் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.
3. புரொபசனல் புரோகிராம் (PROFESSIONAL PROGRAMME)
எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் தேர்வில் வெற்றி பெற்றவர்களால் மட்டுமே புரோபசனல் புரோகிராம் தேர்வு எழுத இயலும்.
தேர்வு விவரம்
1. பவுண்டேசன் புரோகிராம் (FOUNDATION PROGRAMME)
PAPERSSUBJECTS
Paper IBusiness Communication
Paper IILegal Aptitude and Logical Reasoning
Paper IIIEconomic and Business Environment
Paper IVCurrent Affairs and Quantitative Aptitude
2. எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (EXECUTIVE PROGRAMME)
GROUP I
PAPERSSUBJECTS
Paper IJurisprudence, Interpretation and General Laws
Paper IICompany Law and Practice
Paper IIISetting up of Business, Industrial and Labour Laws
Paper IVCorporate Accounting and Financial Management
GROUP II
PAPERSSUBJECTS
Paper ICapital Market and Securities Laws
Paper IIEconomic, Commercial and Intellectual Property Laws
Paper IIITax Laws and Practice
3. புரொபசனல் புரோகிராம் (PROFESSIONAL PROGRAMME)
GROUP I
PAPERSSUBJECTS
Paper IEnvironmental, Social and Governance (ESG)-Principles and Practice
Paper IIDrafting, Pleadings and Appearances
Paper IIICompliance Management, Audit and Due Diligence
Paper IVElective 1 (select one Paper out of 4 Elective Papers)
1.CSR and Social Governance
2.Internal and Forensic Audit
3.Intellectual Property Rights-Law and Practice
4.Artificial Intelligence, Data Analytics and Cyber Security-Laws and Practice
GROUP II
Paper VStrategic Management and Corporate Finance
Paper VICorporate Restructuring, Valuation and Insolvency
Paper VIIElective 2 (Select one Paper out of 5 Elective Papers)
1.Arbitration, Mediation and Conciliation
2.Goods and Services Tax (GST) and Corporate Tax Planning
3.Labour Laws and Practice
4.Banking and Insurance – Laws and Practice
5.Insolvency and Bankruptcy – Law and Practice
குறிப்பு:
1.மேலே குறிப்பிட்டுள்ள குரூப்-1ல் (Group-I) மொத்தமுள்ள விருப்ப பாடங்களில் (Elective Papers) ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதினால் போதும்.
2.மேலே குறிப்பிட்டுள்ள குரூப்-2ல் (Group-II) மொத்தமுள்ள விருப்ப பாடங்களில் (Elective Papers) ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டும்.
தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்.
"எக்ஸிகியூட்டிவ் புரோகிராம்" தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக ஒரு மாத "எக்ஸிகியூட்டிவ் டெவலெப்மென்ட் புரோகிராம்" (Executive Development Programme) (EDP) பயிற்சி பெற வேண்டியது அவசியமாகும். இந்த 1 மாத பயிற்சியில் 15 நாட்கள் வகுப்பறை பயிற்சி மற்றும் 15 நாட்கள் ஆன்லைன் பயிற்சி ஆகியவை இடம்பெறும்.
"புரோபசனல் புரோகிராம்" தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக "கார்ப்பரேட் லீடர்சிப் டெவலெப்மென்ட் புரோகிராம்" (Corporate Leadership Development Programme) என்னும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு…
இந்த தேர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள தமிழகத்திலுள்ள அலுவலகங்களில் தொடர்பு கொள்ளலாம்.
1. தென்மண்டல அலுவலகம்:
Southern India Regional Office (Chennai)
Phone: 044-28279898 / 044-28268685
E-mail: siro@icsi.edu.
2. கோயம்புத்தூர் அலுவலகம்:
Phone: 0422-2237006
E-mail: coimbatore@icsi.edu.
3. மதுரை அலுவலகம்:
Phone: 0452-4295169
E-mail: madurai@icsi.edu.
4. சேலம் அலுவலகம்:
Phone: 0427-2443600
E-mail: salem@icsi.edu.
இவை தவிர www.icsi.edu மற்றும் http://support.icsi.edu என்ற இணையதள முகவரிகளிலும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.