66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து


66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து
x

சிறுபான்மை கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள 4 சிறுபான்மை கல்லூரிகளில், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக தேர்வு குழு அமைக்காமல், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறி 66 உதவி பேராசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகம், இந்த நியமனத்திற்கு 4 வாரத்துக்குள் ஒப்புதல் அளித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

1 More update

Next Story
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.