நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள்
x

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2024-2025) புதிய படிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக 'தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன்' இணைந்து பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை தரமணியில் உள்ள சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரியில் 'மின்சார வாகன தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் 6 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த பயிற்சியில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 59 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மின்னியல் மற்றும் ஆட்டோமொபைல் துறை விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். சென்டிரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஓ.ஜி. தரணிபதி, மின்னியல் துறையின் தலைவர் பி.தினகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

1 More update

Next Story