மத்தியஅரசின் சுங்கத்துறையில் வேலை


மத்தியஅரசின் சுங்கத்துறையில் வேலை
x

மத்தியஅரசின் சுங்கத்துறையில் குரூப் 'சி'காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்தியஅரசின் வருவாய் மற்றும் நிதிஅமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் சுங்கத்துறையின் மரைன் பிரிவில்(மும்பை மண்டலம்-I) குரூப் 'சி'-யில் சீமன்(Seaman),கிரீசர்(Greaser) உள்ளிட்ட மொத்தம் 44 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த காலியிடங்கள்: 44, குரூப் 'சி' பதவிகள்

பணியிடம்: மும்பை

பணி விவரம்: சீமன்(Seaman)-33,கிரீசர்(Greaser)-11 குரூப் 'சி' பதவிகள்

வயதுவரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

எஸ்.சி./எஸ்.டி(SC/ST): 5 ஆண்டுகள்

ஓபிசி(OBC): 3 ஆண்டுகள்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வி தகுதி:

சீமன்(Seaman)- பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கிரீசர்(Greaser)- பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்: ரூ.18000-56900/-

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Assistant Commissioner of Customs,

P & E (Marine), 11th floor,

New Customs House,

Ballard Estate, Mumbai- 400 001.

விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-05.11.2024

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-17.12.2024

விவரங்களுக்கு: https://www.mumbaicustomszone1.gov.in/


Next Story