இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் வேலை: 348 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்


இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ்  வங்கியில் வேலை: 348 பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
x

காலியாக உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸ்கியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 348 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.

தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 1.8.2025 தேதியின்படி 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.10.2025

அதிகாரபூர்வ அறிவிப்பில் கல்வி தகுதி, பணியிடங்கள் உள்ளிட்டவற்றை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.

அதிகார்பூர்வ அறிவிப்பை படிக்க: https://ippbonline.bank.in/documents/20133/133019/1759925784182.pdf

1 More update

Next Story