மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
x

மத்திய அரசு மின் விநியோகிக்கும் நிறுவனத்தில் 73 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் டிரைய்னி அதிகாரி பதவிக்கு உள்ள 73 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யுஜிசி நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரம்:

அதிகாரி பயிற்சி (சுற்றுச்சூழல் மேலாண்மை)-14, அதிகாரி பயிற்சி (சமூக மேலாண்மை)-15, அதிகாரி பயிற்சி (HR)-37, அதிகாரி பயிற்சி (PR)-7, CTUIL – அதிகாரி பயிற்சி (HR)-2

வயது வரம்பு:

24.12.2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்

வயது தளர்வு:

ஒபிசி(OBC)3 ஆண்டுகள்

எஸ்சி, எஸ்டி(SC/ST) 5 ஆண்டுகள்

கல்வித் தகுதி:

சுற்றுச்சூழல் மேனேஜ்மெண்ட் - சுற்றுச்சூழல் அறிவியல் / இயற்கை வள மேலாண்மை/ சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சமூக மேலாண்மை- சமூக பணி பிரிவில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மனித வளம் - சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம்/டிப்ளமோ/ MBA முடித்திருக்க வேண்டும்.

மக்கள் தொடர்புகள் (PR)- மக்கள் தொடர்பியல் / மக்கள் தொடர்பு / இதழியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

யுஜிசி - நெட் தகுதி: யுஜிசி - நெட் டிசம்பர் 2024 தேர்வில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் நெட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பள விவரம்: ரூ.40,000- ரூ.1,60,000

தேர்வு செய்யப்படும் முறை:

யுஜிசி - நெட் டிசம்பர் 2024 தேர்வில் பெறும் தேர்ச்சி மதிப்பெண்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:https://www.powergrid.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்24.12.2024

தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்படும்.


Next Story