சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
மும்பை,
சர்வதேச சூழ்நிலை, இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் உள்பட பல்வேறு காரணிகள் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, 81 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 379 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 648 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 271 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
195 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 969 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 155 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 641 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
256 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 985 புள்ளிகள் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 585 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 562 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.






