ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது.
மும்பை.
இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
அதன்படி, 114 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 461 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 195 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 919 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
13 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 164 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 294 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 796 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
265 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 242 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 561 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 147 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story






