ஏற்றத்துடன் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தை
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் நிலைபெற்றன.
மும்பை,
மும்பை பங்குச்சந்தையில் இன்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை பிஎஸ்இ பெஞ்ச்மார்க் 1,961.32 புள்ளிகள் உயர்ந்து 79,117 ஆக இருந்தது. நிப்டி 557 புள்ளிகள் உயர்ந்து 23,907ஆக இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் ஏற்றத்துடன் பங்குவர்த்தகம் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் இன்றைய வர்த்தகம் முடிவில் 992.74 புள்ளிகள் முன்னேறி 80,109.85 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) 314.65 புள்ளிகள் அதிகரித்து 24,221.90 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தின் போது லார்சன் , பாரத ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. அதேநேரம் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பின்தங்கின. மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆளும்கூட்டணிக்கு கிடைத்த வெற்றியும் பங்குவர்த்தக உயர்வுக்கு ஒரு காரணம் என்று ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் தலைமை முதலீட்டு நிபுணர் வி.கே.விஜயகுமார் கூறியுள்ளார்.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் நிலைபெற்றன.கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க சந்தைகள் சாதகமான நிலையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.