குவைத்தில் சிக்கிய மும்பை-மான்செஸ்டர் விமானம்; இந்திய பயணிகள் 13 மணிநேரம் தவிப்பு


குவைத்தில் சிக்கிய மும்பை-மான்செஸ்டர் விமானம்; இந்திய பயணிகள் 13 மணிநேரம் தவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2024 8:28 PM IST (Updated: 1 Dec 2024 9:31 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற விமானம் குவைத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்நிலையில் பஹ்ரைனில் இருந்து புறப்பட்டு சென்ற 2 மணிநேர பயணத்திற்கு பின்னர், நடுவழியில் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்து உள்ளது.

இதனால், குவைத் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. எனினும், விமான பயணிகளில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தனிக்கவனம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய பயணிகளுக்கு குவைத்தில் போதிய மதிப்பு அளிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் இருந்த இந்திய பயணிகள் 13 மணிநேரம் வரை உணவோ அல்லது வேறு எந்தவித உதவியோ பெற முடியாமல் தவித்து உள்ளனர். இதனால், கல்ப் ஏர் விமான பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் 4 மணிநேரத்திற்கு தண்ணீர் கூட வழங்கவில்லை. போர்வை, உணவு ஆகியவை வழங்கப்படவில்லை. இந்திய பயணிகள் தரையில் அமர வைக்கப்பட்டனர் என பயணி ஒருவர் கூறியுள்ளார். எனினும், இந்த விவகாரம் பற்றி கல்ப் ஏர் விமான நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.


Next Story