கச்சத்தீவு மீட்பு: நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கச்சத்தீவு மீட்பு:  நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 April 2025 3:33 PM (Updated: 1 April 2025 4:18 PM)
t-max-icont-min-icon

சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு குறித்து மத்திய அரசை வலியுறுத்தி நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நாளை திமுக அரசு தனித்தீர்மானத்தை கொண்டு வருகிறது.

சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு குறித்து நாளை தனித்தீர்மானத்தை முன்மொழிகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைபோக்கிட கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு. கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர், இலங்கை அரசுடன் பேசி சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story