திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் மீது விரைவு ரெயில் மோதி விபத்து


தினத்தந்தி 11 Oct 2024 9:16 PM IST (Updated: 11 Oct 2024 10:02 PM IST)
t-max-icont-min-icon

நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது விரைவு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

திருவள்ளூர்,

மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ரெயில் வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலின் பின்னால் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த பகுதி இருட்டாக இருப்பதால், எத்தனை பயணிகள் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள் என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திகு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story