சென்னை - நாளை மாலை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை


சென்னை - நாளை மாலை 2 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 6 May 2025 8:34 PM IST (Updated: 6 May 2025 9:45 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

காஷ்மீர் பஹல்காம் தாகுதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக இரு நாடுகளும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், எல்லை கிராமங்களில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளை (7ஆம் தேதி) நாடு முழுக்க உள்ள 244 மாவட்டங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971ப்ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற இருக்கிறது. அதேபோல், நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை இந்த போர் கால பாதுகாப்பு ஒத்திகையின் போது நடத்த அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற இருக்கிறது. மேலும், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

போர் கால பாதுகாப்பு ஒத்திகை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை போர் கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story