எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 March 2025 7:02 AM (Updated: 20 March 2025 9:24 AM)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர். இந்த நிலையில், அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான்பார்த்த விசயங்களை பற்றி பேச வேண்டும் என கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தபோதும் அவர், என்ன விசயங்களை பார்த்துள்ளார் என்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும், வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர், தி.மு.க. எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்த வாசகங்களுடன் வந்தனர். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விசயங்களில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


Next Story