குளிர்ந்த நீர்- வெந்நீர் குளியலின் நன்மைகள்..!


குளிர்ந்த நீர்- வெந்நீர் குளியலின் நன்மைகள்..!
x
தினத்தந்தி 19 Oct 2025 3:25 PM IST (Updated: 19 Oct 2025 3:39 PM IST)
t-max-icont-min-icon

வெதுவெதுப்பான நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.

மழைக் காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர்ந்த நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை விட இதமான சூட்டுடன் கூடிய வெந்நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள். இந்த இரண்டு குளியல் முறையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

வெந்நீர் குளியல்:

தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.

வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.

தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.

குளிர்ந்த நீர் குளியல்:

குளிர்ந்த நீர் நரம்பு மண்டலத்தை தூண்டி சுவாசத்தின் வழியே ஆக்சிஜனை உள்ளிழுப்பதை அதிகரிக்க செய்யும். உடலுக்குள் ஆக்சிஜன் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் சீக்கிரம் எழுவதற்கு வழிவகுக்கும்.

இந்த குளிர் நீர் குளியல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம். ரத்த நாளங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

குளிர் நீர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த பலனை அளிக்கும்.

1 More update

Next Story