தமிழகத்தில் கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை?- முழு விவரம்


தமிழகத்தில் கால்நடை மருத்துவம் சார்ந்த  படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் எவை?- முழு  விவரம்
x
தினத்தந்தி 12 Aug 2024 11:16 AM IST (Updated: 12 Aug 2024 12:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY) இந்தியாவிலேயே முதன் முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகமாகும்.1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, ஆய்வு மற்றும் விரிவாக்க பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.சென்னையில் உள்ள மாதவரம் பால் பண்ணை காலணியில் இயங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் ,பல்வேறு கால்நடை சம்பந்தப்பட்ட படிப்புகளை நடத்தி வருகிறது.

பி.வி எஸ் .சி மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி ( BVSc& ANIMAL HUSBANDRY)

இந்த பல்கலைக்கழகம் பி.வி எஸ் .சி மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி ( BVSc& ANIMAL HUSBANDRY)என்னும் படிப்பை நடத்துகிறது. இந்த படிப்பு 5 1/2 ஆண்டு படிப்பாகும். நான்கு ஆண்டுகள் நேரடி படிப்பாகவும், பின்னர்" இன்டெர்ன்ஷிப்" எனப்படும் ஓராண்டு பயிற்சியும் இணைந்து மொத்தம் 5 1/2 ஆண்டுகள் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.

இந்தப் படிப்பை தவிர-

1. பி டெக் புட் டெக்னாலஜி ( B.Teh. FOOD TECHNOLOGY)

2. பி .டெக். பவுல்ட்ரி டெக்னாலஜி ,( B.Tech POULTRY TECNOLOGY).

3.பி .டெக் .டைரி டெக்னாலஜி B.Tech DAIRY TECHNOLOGY

-ஆகிய படிப்புகளும் இங்கு நடத்தப்படுகிறது.

பி.வி எஸ் .சி மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி ( BVSc& ANIMAL HUSBANDRY) என்னும் பட்டப்படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரம்.

1. மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி

சென்னை

2. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

நாமக்கல்

3. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

ஒரத்தநாடு

4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

சேலம்

5. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

தேனி

6. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உடுமலைப்பேட்டை

ஆகிய கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிறது.

பி டெக் ஃபுட் டெக்னாலஜி ( B.Teh FOOD TECHNOLOGY

பி டெக் புட் டெக்னாலஜி ( B.Teh FOOD TECHNOLOGY ) என்னும் பட்டப்படிப்பை கொடுவேலி என்னும் இடத்தில் இயங்கும்" காலேஜ் ஆப் புட் அண்ட் டைரி டெக்னாலஜி "(COLLEGE OF FOOD AND DIARY TECHNOLOGY ,KODUVELI) என்ற கல்வி நிறுவனம் நடத்துகிறது.

பி டெக் பவுல்ட்ரி டெக்னாலஜி ( B.Teh POULTRY TECHNOLOGY )

பி டெக் பவுல்ட்ரி டெக்னாலஜி ( B.Teh POULTRY TECHNOLOGY ) என்னும் பட்டப்படிப்பை ஓசூரில் உள்ள காலேஜ் ஆஃப் பவுல்ட்ரி ப்ரொடக்ஷன் அண்ட் மேனேஜ்மென்ட் (COLLEGE OF POULTRY PRODUCTION AND MANAGEMENT - MATHIGIRI, HOSUR- 635 110) என்ற கல்வி நிறுவனம் நடத்துகிறது.

பி டெக் டைரி டெக்னாலஜி ( B.Teh DAIRY TECHNOLOGY )

பி டெக் டைரி டெக்னாலஜி ( B.Teh DAIRY TECHNOLOGY ) என்னும் பட்டப்படிப்பை கொடுவேலி என்னும் இடத்தில் இயங்கும்" காலேஜ் ஆப் புட் அண்ட் டைரி டெக்னாலஜி "(COLLEGE OF FOOD AND DIARY TECHNOLOGY ,KODUVELI) என்ற கல்வி நிறுவனம் நடத்துகிறது.

பி.வி எஸ் .சி மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி ( BVSc& ANIMAL HUSBANDRY) என்னும் பட்டப்படிப்பில் சேர…

பி.வி எஸ் .சி மற்றும் அனிமல் ஹஸ்பண்டரி ( BVSc& ANIMAL HUSBANDRY) என்னும் பட்டப்படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் இயற்பியல் , வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும், பிளஸ் டூ தேர்வில் VOCATIONAL STREAM என அழைக்கப்படும் உயிரியல் மற்றும் வேளாண் பயிற்சிகள்/ கோழிப்பண்ணை (POULTRY) / பால்பண்ணை( DAIRYING ) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்

பி டெக் புட் டெக்னாலஜி ( B.Teh FOOD TECHNOLOGY ),பி டெக் பவுல்ட்ரி டெக்னாலஜி ( B.Teh POULTRY TECHNOLOGY ) மற்றும்பி டெக் டைரி டெக்னாலஜி ( B.Teh DAIRY TECHNOLOGY ) ஆகிய பட்டப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள், பிளஸ் டூ தேர்வில் கணிதம் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை கண்டிப்பாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

உறுப்பு கல்லூரிகள் (CONSTITUENT COLLEGES )

கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தோடு இணைந்த உறுப்பு கல்லூரிகள் (CONSTITUENT COLLEGES --VETERINARY AND ANIMAL SCIENCES)பற்றிய விபரம்:

1.மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி,

வேப்பேரி

சென்னை 600 007

2. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

லத்துவாடி

நாமக்கல் 637002

3. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

இராமையம்பட்டி

திருநெல்வேலி - 627 358

4. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

ஒரத்தநாடு

தஞ்சாவூர் 614 625.

5. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

தலைவாசல் கூட் சாலை,

சேலம் - 636 112

6. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

வீரபாண்டி

தேனி- 625 534

7. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உடுமலைப்பேட்டை

திருப்பூர் - 642 205.

**********************

கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து FOOD ,DIARY AND POULTRY ஆகிய படிப்புகளை நடத்தும் உறுப்பு கல்லூரிகள் பற்றிய விபரம் (CONSTITUENT COLLEGES- TECHNOLOGY (FOOD ,DIARY AND POULTRY)

1.உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி,

கொடுவேலி

அகமதி,

சென்னை- 600052.

2.கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி

மத்திகிரி,

ஓசூர் -635 110

மேலும் விவரங்களுக்கு,

தலைவர்,

சேர்க்கை குழு (UG9

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்,

மாதவரம் பால் காலனி,

சென்னை 600 51 .

தொலைபேசி 044 -2997349 ,29997348 .

மின்னஞ்சல் : admission@tanuvas.org.in

--என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்





Next Story