ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு: தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்


ஓமன் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரிப்பு:  தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2023 2:30 AM IST (Updated: 27 Oct 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஓமன் நாட்டின் மக்கள் தொகை 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மஸ்கட்,

ஓமன் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்துள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகை கடந்த ஆண்டின் 3-வது காலாண்டை ஒப்பிடும் போது 6.1 சதவீதமும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகை 11.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை 51 லட்சத்து 36 ஆயிரத்து 957 ஆகும். இதில் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் 56.69 சதவீதம் இருக்கின்றனர். அதாவது இதன் எண்ணிக்கை 29 லட்சத்து 12 ஆயிரத்து 64 ஆகும். அதே நேரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 24 ஆயிரத்து 893 ஆக இருந்து வருகிறது.

ஓமன் நாட்டில் மஸ்கட் பகுதியில் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் இந்த பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 28.7 சதவீதம் பேரும், அதனை தொடர்ந்து வடக்கு அல் பத்தினா பகுதியில் 17.6 சதவீதம் பேரும், தகிலியா பகுதியில் 10.65 சதவீதம் பேரும் வசிக்கின்றனர். முசந்தம் பகுதியில் மிகவும் குறைந்த அளவாக 54 ஆயிரத்து 224 பேர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


Next Story