ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் அமர் சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி அமர் சேவா சங்க வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அமர் விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 19ஆம் தேதி காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின. மூன்று நாள் யாகசாலைகள் நடைபெற்று நேற்று வியாழக்கிழமை காலை 9.49 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சென்னையில் இருந்து குருஜி வாராகி மைந்தன் கணபதி சுப்ரமணியம் வேத விற்பனர்களுடன் வருகை தந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழாவில் அமர் சேவா சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கர் ராமன், கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் முருகையா, கணேசன், டிவி சுப்பிரமணியன், அன்பு ரமேஷ், பிரகாஷ், பிரிமியர் ராமன், அழகேசன், பட்டம்மாள் மற்றும் அமர்சேவா சங்கத்தின் நல விரும்பிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.






