யுகாதி பண்டிகை: திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


யுகாதி பண்டிகை: திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x

யுகாதி பண்டிகையையொட்டி திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30-ந்தேதி யுகாதி பண்டிகை நடக்கிறது. அதையொட்டி 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்கிறது. இதனால் கோவிலில் 25-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 30-ந்தேதி ஆஸ்தானம், சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர அனைத்துச் சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. வருகிற 25 மற்றும் 30-ந்தேதிகளில் புரோட்டோக்கால் வி.ஐ.பி.க்களுக்கான பிரேக் தரிசனங்கள் மட்டுமே இருக்கும்.

24 மற்றும் 29-ந்தேதிகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் தொடர்பான பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story