கனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து


கனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 14 Oct 2024 6:29 PM IST (Updated: 14 Oct 2024 6:30 PM IST)
t-max-icont-min-icon

விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் நாளை பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்காமலும், அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமலும் தரிசனம் செய்வதற்கு வி.ஐ.பி. பிரேக் தரிசன முறை அமலில் உள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும், முக்கியமான விழாக் காலங்களின்போதும், பேரிடர் காலங்களின்போதும் சூழ்நிலைக்கு ஏற்ப பிரேக் தரிசனத்தை ரத்து செய்வது வழக்கம்.

அவ்வகையில், நாளை மறுநாள் (16.10.2024) வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாளை (15.10.2024) பரிந்துரை கடிதங்கள் பெறப்படாது என்றும், பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story