திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழா.. நிகழ்ச்சிகள் முழு விவரம்


திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழா.. நிகழ்ச்சிகள் முழு விவரம்
x

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறும்.

திருச்சானூர்:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. விழாவை முன்னிட்டு நாளை முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவ விழா தொடங்குவதற்கு முன்னதாக நாளை (26.11.2024) காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறும். நாளை மறுநாள் (27.11.2024) காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை லட்ச குங்குமார்ச்சனை நடைபெறுகிறது. அடுத்த நாள் (28.11.2024) காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலையிலும் இரவிலும் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவ நிகழ்வுகள்:

28.11.2024: காலை 9 மணி முதல் 9.30 மணி வரை துவஜாரோஹணம் (கொடியேற்றம்), இரவு 7 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் வீதியுலா.

29.11.2024 காலை 8 மணி முதல் 10 மணி வரை பெரிய சேஷ வாகனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹம்ச வாகனம்

30.11.2024: காலை 8 மணி முதல் 10 மணி வரை முத்தையாபு பாண்டிரி வாகனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை சிம்ம வாகனம்

01.12.24 : காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்ப விருட்ச வாகனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹனுமந்த வாகனம்

02.12.24 : காலை 8 மணி முதல் 10 மணி வரை பல்லக்கு வாகனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனம்

03.12.24 : காலை 8 மணி முதல் 10 மணி வரை சர்வபூபால வாகனம், மாலை 4.20 மணி முதல் 5.20 மணி வரை தங்க ரதம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனம்,

04.12.24 : காலை 8 மணி முதல் 10 மணி வரை சூர்ய பிரபை வாகனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனம்

05.12.24: காலை 8 மணி முதல் 10 மணி வரை தேரோட்டம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை அஸ்வ வாகனம்

06.12.24 : காலை 7 மணி முதல் 8 மணி வரை பல்லக்கு உற்சவம், மதியம் 12.15 மணி முதல் 12.20 மணி வரை பஞ்சமி தீர்த்தம்

07.12.2024 : மாலையில் புஷ்பயாகம் நடைபெறும்.


Next Story