நாங்கூர் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


நாங்கூர் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வன் புருஷோத்தம பெருமாள், வன் புருஷோத்தம நாயகி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.

திருவெண்காடு அருகே நாங்கூரில் வன் புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி வன் புருஷோத்தம பெருமாள், வன் புருஷோத்தம நாயகி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து வேதை ராஜன் பட்டாச்சாரியார் தலைமையில் திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யான திருக்கோலத்தை கண்டு தரிசித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது.


Next Story