திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை
x

கருடசேவையின்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி பவுர்ணமி கருடசேவை நடந்தது.

உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.


Next Story