திருவானைக்காவலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவானைக்காவலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி,
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி நேற்று மாலை 5.30 மணியளவில் உற்வசர் ஜம்புகேஸ்வர் வெள்ளி குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக்கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை வந்தடைந்தனர். அங்கு திருசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் வைபம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.