நாகை: திருமருகல் அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்


நாகை: திருமருகல் அருகே ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
x

யாக சாலை பூஜை நிறைவடைந்ததையடுத்து இன்று காலை 10 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம். இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலையில் விக்னேஷ்வர பூஜை, மகாலட்சுமி பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, தீபாராதனையைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் கலச பூஜை, மண்டப பூஜை, யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

இன்று அதிகாலை யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், மூலவர் குடமுழுக்கும் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், மருளாளிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story