தீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் வாசல் படிக்கட்டுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீப தரிசனம் செய்தனர். இதேபோல் பல்வேறு சிவன் கோவில்கள், முருகன் கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டும், சொக்கப்பனை கொளுத்தியும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர். வீட்டின் முன்பு கோலமிட்டு அதில் அகல்விளக்கு ஏற்றி வைத்தனர். இதேபோல் அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு இடங்களிலும் வாசல் படிக்கட்டுகளில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒருசில இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் திருக்கார்த்திகையை கொண்டாடுகின்றனர்.
Related Tags :
Next Story