திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையை மீறி 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலமானது நேற்று (16.10.2024) இரவு 8.00 மணிக்கு தொடங்கி இன்று (17.10.2024) மாலை 5.38 வரை நடைபெறுகிறது. இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 16, 17-ந் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றி வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். இதன்படி சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story