திருமலை: காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு மகா அபிஷேகம்


தினத்தந்தி 27 Aug 2024 12:14 PM GMT (Updated: 27 Aug 2024 12:17 PM GMT)

ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம் நடைபெறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள கோகர்பம் கார்டனில் இன்று கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.

அங்குள்ள காளிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள்-சந்தன கலவையால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. அதன்பின்னர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில், இளைஞர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தோட்டத் துறை இணை இயக்குநர் ஸ்ரீநிவாசலு மற்றும் அலுவலர்கள், தோட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமலை ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு கோகுலாஷ்டமி ஆஸ்தான உற்சவம் நடைபெறுகிறது. கோவில் தங்க வாசல் முக மண்டபத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வ பூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார். அதன்பின்னர் உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் துவாதச ஆராதனை நடைபெற உள்ளது.


Next Story