ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்


ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
x
தினத்தந்தி 12 Nov 2024 10:53 AM IST (Updated: 12 Nov 2024 10:55 AM IST)
t-max-icont-min-icon

சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்போர் சாப்பிடக்கூடாத உணவுகள்

ஏகாதசி விரதத்தின் மிக முக்கியமான அங்கம் தானியங்களால் ஆன உணவை எவ்வகையிலும் உண்ணாமல் இருப்பதேயாகும். குறிப்பாக அரிசி, சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பதும் ஏகாதசி விரதத்தை முறிக்கும்.

நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும். காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.

சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.

சாப்பிடக் கூடிய உணவுகள்:

கொய்யாப் பழம், மாதுளம் பழம், ஆப்பிள் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளிப் பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரி பிஞ்சு, வெள்ளரிக்காய், நாவல் பழம் சாப்பிடலாம்.

அவித்த வேர்கடலை, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு சாப்பிடலாம். கேரட், முட்டைக்கோஸ், வெண்டைக்காய், கத்தரிக்காய், தடியங்காய், பூசணிக்காய், நாட்டு சுரக்காய், பீக்கங்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தி பொறியல், கூட்டு, சூப் தயார் செய்து சாப்பிடலாம். இளநீர், தேங்காய், பசும் பால், பசுந்தயிர், மோர் எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழங்கள்:

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா பழம் இவற்றை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

விரத நாட்களில் வீட்டிலேயே சமைத்து பகவானுக்கு நைவேத்யம் செய்து பிரசாதமாக உண்பது சிறந்தது. ஏகாதசி அன்று பசு நெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் மட்டும் சமையலுக்கு பயன்படுத்தலாம். கடையில் விற்கப்படும் சமைத்த, வறுத்த, அவித்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.


Next Story