திதிகளுக்குரிய தெய்வங்கள்


திதிகளுக்குரிய தெய்வங்கள்
x

பிறந்த திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு திதியும் ஒரு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரியதாக பார்க்கப்படுகிறது. வளர்பிறையில் வரக்கூடிய திதிகளுக்கு சுக்லபட்சம் திதிகள் என்றும் தேய்பிறையில் வரக் கூடிய திதிகள் கிருஷ்ணபட்ச திதிகளாகவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளுக்கான திதிகளுக்குரிய தெய்வங்களை வணங்குவது விசேஷமானது. அதிலும் குறிப்பாக நம்முடைய பிறந்த திதிக்குரிய தெய்வ வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.

சுக்லபட்சம் (வளர்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)

1. பிரதமை - பிரம்ம தேவன் மற்றும் குபேரன்

2. துவிதியை - பிரம்ம தேவன்

3. திரிதியை - சிவ பெருமான் மற்றும் கவுரி அம்மன்

4. சதுர்த்தி -விநாயகர் மற்றும் எம தர்மன்

5. பஞ்சமி - திரிபுர சுந்தரி

6. சஷ்டி - செவ்வாய் பகவான்

7. சப்தமி - இந்திரன் மற்றும் ரிஷிகள்

8. அஷ்டமி - கால பைரவர்

9. நவமி - சரஸ்வதி

10.தசமி - வீரபத்திரன் மற்றும் தர்ம ராஜா

11. ஏகாதசி - மகா விஷ்ணு மற்றும் ருத்ரன்

12. துவாதசி - பெருமாள்

13. திரயோதசி - மன்மதன்

14. சதுர்த்தசி -காளி தேவி

15. பவுர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை திதிகளுக்குரிய தெய்வங்கள்)

1. பிரதமை - துர்க்கை அம்மன்

2. துவிதியை - வாயு பகவான்

3. திரிதியை - அக்னி பகவான்

4. சதுர்த்தி -விநாயகர் மற்றும் எம தர்மன்

5. பஞ்சமி - நாக தேவதை

6. சஷ்டி - முருகப் பெருமான்

7. சப்தமி - சூரிய தேவன்

8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை அம்மன்

9. நவமி - சரஸ்வதி தேவி

10. தசமி - துர்க்கை அம்மன் மற்றும் எம தர்மன்

11. ஏகாதசி - சிவ பெருமான் மற்றும் மகா விஷ்ணு

12. துவாதசி -சுக்கிரன்

13. திரயோதசி - நந்தி பகவான்

14. சதுர்த்தசி -ருத்ரன்

15. அமாவாசை -காளி தேவி மற்றும் பித்ருக்கள்

பிறந்த திதிகளுக்குரிய தெய்வங்களை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான வெற்றி கிடைப்பதுடன், பிறப்பு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


Next Story