பெசன்ட் நகர் மாதா தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


பெசன்ட் நகர் மாதா தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2024 5:22 PM GMT (Updated: 30 Aug 2024 5:35 AM GMT)

பெசன்ட் நகர் புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை,

சென்னை பெசன்ட் நகரில் உள்ள புனித அன்னை வேளாங்கண்ணி தேவாலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருக்கொடியேற்றும் விழாவுக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து தேவாலயத்தில் இருந்து நற்கருணை தேர் ஊர்வலம் புறப்பட்டது. கொடியேற்றத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். மொட்டை அடித்தும், தென்னம்பிள்ளை வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இன்று தொடங்கிய ஆண்டு பெருவிழா செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8-ந்தேதி அன்னையின் பிறப்பு பெருவிழாவும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.


Next Story