போட்டோ கிப்ட் பாக்ஸ்


போட்டோ கிப்ட் பாக்ஸ்
x
தினத்தந்தி 29 Oct 2023 7:00 AM IST (Updated: 29 Oct 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

அழகான போட்டோ கிப்ட் பாக்ஸ் தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்.

போட்டோ கிப்ட் பாக்ஸ்

தேவையான பொருட்கள்:

சிறிய அட்டைப் பெட்டி | கார்ட்போர்டு அட்டை | வண்ண காகிதத்தாள் | பசை உல்லன் நூல் | புகைப்படங்கள் | அலங்கார ஸ்டிக்கர்கள் | அலங்கார பூக்கள் | பச்சை நிற குவில்லிங் பேப்பர்

செய்முறை:

சிறிய அட்டைப்பெட்டி ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.

வண்ண காகிதத்தாளை அட்டைப் பெட்டியின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஒட்டுங்கள். பின்பு அதை நன்றாக உலர வையுங்கள்.

அட்டைப்பெட்டிக்கு மூடி தயாரிப்பதற்காக, ஒரு கார்ட்போர்டு அட்டையை நீளவாக்கில் வெட்டி அதன் மேல் வண்ண காகிதத்தாளை ஒட்டுங்கள். அது நன்றாக உலர்ந்ததும், அதை படத்தில் காட்டியவாறு மூடிக்கு தேவையான அளவில் சதுரமாக மடித்து ஒட்டுங்கள்.

படத்தில் காட்டியுள்ளபடி இந்த சதுர வடிவ அட்டையை மற்றொரு காகிதத்தில் வைத்து, பெட்டிக்கு பொருந்துமாறு மூடி ஒன்றை தயார் செய்யுங்கள்.

இப்போது அட்டைப்பெட்டியின் மீது அலங்கார ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்கரியுங்கள்.

அட்டைப்பெட்டியின் அகலத்தை விட, சற்றே குறைவான அகலம் கொண்ட நீளமான வண்ண காகிதத்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வண்ண காகிதத்தாளின் நீளம் இருக்க வேண்டும்.

புகைப்படங்களின் அளவுக்கேற்றவாறு படத்தில் காட்டியுள்ளபடி வண்ண காகிதத்தாளை மடித்துக்கொள்ளுங்கள்

வண்ண காகிதத்தாளின் ஒவ்வொரு மடிப்பிலும் புகைப்படங்களை ஒட்டுங்கள். சில மடிப்புகளில் வாழ்த்துகளையும் எழுதலாம்.

பச்சை நிற குவில்லிங் தாளை சுருட்டி சிறு சிறு இலைகள் வடிவில் செய்து கொள்ளுங்கள்.

அந்த இலைகளை அலங்கார பூக்களுடன் சேர்த்து, புகைப்படங்கள் ஒட்டியிருக்கும் வண்ண காகிதத்தாளில் ஆங்காங்கே ஒட்டி அலங்கரியுங்கள்.

பின்னர் அவற்றை நன்றாக உலர வையுங்கள்.

இப்போது புகைப்படம் ஒட்டியிருக்கும் வண்ண காகிதத்தாளின் அடிப்பகுதியை பெட்டியின் உள்பகுதியோடும், மேல்பகுதியை மூடியின் உள்பகுதியோடும் இணைத்து ஒட்டுங்கள்.

அட்டைப்பெட்டி மூடியின் உள்பகுதியில் படத்தில் காட்டியுள்ளவாறு நூல் கொண்டு கைப்பிடி போல ஒட்டுங்கள்.

இப்போது அழகான 'போட்டோ கிப்ட் பாக்ஸ்' தயார்.


Next Story