தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்கு தீர்வு


தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Jun 2022 7:00 AM IST (Updated: 12 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

இரவு உணவுக்குப் பின்பு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய்ப் பொடியை கலந்து குடித்து வந்தால், தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்

ளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று தூக்கத்தில் உமிழ்நீர் வடிதல். இதன் காரணமாக கேலி, கிண்டலுக்கு உள்ளாகுபவர்களும் உண்டு.

மனிதனுக்கு தினமும் 1 முதல் 2 லிட்டர் வரை உமிழ்நீர் சுரக்கும். குழந்தைகளுக்கு தூக்கத்தில் வாயில் நீர் வழிதல் என்பது இயல்பான விஷயம். ஆனால், பெரியவர்களுக்கு அவ்வாறு ஏற்படுவது

கவனம் செலுத்த வேண்டியதாகும்.

தூக்கத்தில் உமிழ்நீர் வழிவதற்கான காரணங்கள்:

பலருக்கு, முதுகுப் பகுதி கீழே படும்படியாக உறங்குவதை விட பக்கவாட்டிலோ, குப்புறப் படுத்தோ உறங்கும் பழக்கம் இருக்கும். மல்லார்ந்துப் படுக்கும்போது, வாயில் சுரக்கும் எச்சிலை நம்மை அறியாமல் விழுங்கி விடுவோம். அதுவே பக்கவாட்டில் படுக்கும்போது, அது வாயின் ஒரு பகுதியில் சேர்ந்து கொள்ளும். குப்புறப் படுக்கும்போது, நம்மை அறியாமல் வாயில் இருந்து வெளியே வடியும்.

சிலருக்கு வாய் திறந்து தூங்குவதால் இவ்வாறு நேரும். குழந்தைகளுக்கு 2 வயது வரைக்கும் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கும். அதன்பின், படிப்படியாகக் குறைந்துவிடும்.

மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு பக்கவிளைவாக தூக்கத்தில் உமிழ்நீர் வழியும் பிரச்சினை ஏற்படலாம். அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு இயல்பாகவே, உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கும். இதைத் தூக்கத்தில் விழுங்கும் தன்மை இல்லாததால் வெளியே வடியக்கூடும்.

சளி, இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, வாயில் உமிழ்நீர் அதிகரிக்கும். மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே வாய்வழியே வழியும்.

தொண்டையில் பிரச்சினை உள்ளவர்களும், வலியால் எச்சிலை விழுங்க முடியாமல் தவிப்பதுண்டு. இவர்களுக்கு வாயில் சுரக்கும் உமிழ்நீர் அப்படியே தேங்கி இருக்கும். இந்த நீர் தூக்கத்தில் வாய் வழியாக வெளியேறும். அதேபோல், தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இந்தப் பிரச்சினை ஏற்படும். நரம்பியல், மூளை சார்ந்த பாதிப்பு இருப்பவர்களுக்கும் தூக்கத்தில் உமிழ்நீர் வடிவது தவிர்க்க முடியாத ஒன்று.

கட்டுப்படுத்தும் வழிகள்:

மல்லார்ந்துப் படுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், இப்பிரச்சினைக்குப் படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கலாம். இதன் மூலம் தூக்கத்தில், வாயில் சுரக்கும் உமிழ்நீரை இயல்பாகவே விழுங்கும் பழக்கம் ஏற்படும். உமிழ்நீர் வடிவதை தடுக்கும் உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வாங்கிப் பயன்படுத்தலாம்.

பாட்டி வைத்தியம்:

இரவு உணவுக்குப் பின்பு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு நெல்லிக்காய்ப் பொடியை கலந்து குடித்து வந்தால், தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

லவங்கப் பட்டையைத் தூளாக்கி அதை டீயாகத் தயாரித்து, தினமும் குடித்து வந்தால் உமிழ்நீர் வடிவதற்குத் தீர்வு கிடைக்கும். சிறிதளவு துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.


Next Story