மன அழுத்தத்தில் இருந்து மீளும் வழிகள்
ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்குவது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியம். சீக்கிரமாக படுத்து, வழக்கமான நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். சமூகமயமாக்கல் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்.
மன அழுத்தம், ஆண்களைக் காட்டிலும் பெண்களை அதிகமாக பாதிக்கிறது என்று பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மாற்றங்கள் பருவமடைதல், கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம், பிரசவத்திற்குப் பிறகு அல்லது கருச்சிதைவுக்குப் பிறகு தெளிவாகத் தெரியும்.
குடும்பப் பொறுப்புகள், நிதி நிர்வாகம், குழந்தைகளை வளர்ப்பது ஆகிய செயல்பாடுகள் மூலம் பெண்கள் அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அதிலும் ஒற்றை பெற்றோராக இருக்கும் பெண்களுக்கு இதில் கூடுதல் பாதிப்பு உண்டாகிறது.
குடும்ப வரலாறு, வயதுக்கு வந்தபின் ஏற்படும் ஆரம்பகால ஹார்மோன் மாற்றங்கள், 10 வயதுக்கு முன் பெற்றோரை இழத்தல், சமூக ஆதரவு அமைப்பின் இழப்பு அல்லது அத்தகைய இழப்பின் அச்சுறுத்தல், வேலை இழப்பு, உறவு அழுத்தம், பிரிவு அல்லது விவாகரத்து போன்ற தொடர்ச்சியான உளவியல் மற்றும் சமூக அழுத்தங்கள், குழந்தை பருவத்தில் உடல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாதல், சில மருந்துகளின் பயன்பாடு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க நாம் சில நுட்பங்களை பின்பற்றலாம். அவை இங்கே…
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இது மன அழுத்தத்தை அதிகரிக்கும் ரசாயனங்களைக் குறைக்கிறது. மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கிறது. வித்தியாசமான செயல்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். அருங்காட்சியகத்திற்கு செல்லுங்கள். புத்தகத்தை எடுத்துச் சென்று பூங்காக்களில் உட்கார்ந்து படியுங்கள். உங்களுக்கு பிடித்த சமையலைச் செய்வது, பிடித்த பாடலைக் கேட்பது, நண்பருக்கு மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்புவது, நடனமாடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள்.
குறிப்பேட்டில் தினமும் உங்களது எண்ணங்களை எழுதுவது சிறந்த சிகிச்சை மற்றும் மனச்சோர்வை நிர்வகிக்க உதவும் வழியாகும். எழுதும்போது உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் கவலைகளைப் பற்றி வெளிப்படையாக இருப்பதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்குவது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியம். சீக்கிரமாக படுத்து, வழக்கமான நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். சமூகமயமாக்கல் உங்கள் மனநிலையை மேம்
படுத்தலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பது, நீங்கள் மனதளவில் சோர்வாக இருக்கும்போது, ஆறுதலாக பேசுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை தரும்.
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், சிறிது நேரம் சூரிய ஒளியில் நில்லுங்கள். இது உங்கள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்கலாம். இந்த ஹார்மோன் மன அமைதியை அதிகரிக்கும்.
மதிய உணவின் போது மரங்களுக்கு நடுவே நடந்து செல்வதையோ அல்லது உள்ளூர் பூங்காவில் சிறிது நேரம் செலவிடுவதையோ வழக்கமாக்குங்கள் அல்லது வார இறுதி பயணத்தைத் திட்ட
மிடுங்கள். இந்த நடவடிக்கைகள் அன்றாட வாழ்வில் ஏற்படும் அழுத்தங்களைக் குறைக்கும். இதனால் மனம் நிம்மதி அடையும்.