கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் கவனத்திற்கு..
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறு மாறுபடும் உடல்நிலையால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்களுக்கு போதுமான ஓய்வு அளித்து, முடிந்தவரை அன்றாட வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வது நல்லது.
பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் முக்கியமான ஒன்றாகும். பெண்களுக்கு இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் அச்சம் தோன்றுவது இயல்பே.
அவற்றை எதிர்கொண்டு நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு, கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் அவசியம். இதற்காக கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி பார்ப்போம்.
செய்ய வேண்டியவை:
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அமைதியான சூழல் தேவை. உடன் இருப்பவர்கள் அதனை உறுதி செய்வது அவசியம். பெண்களின் கர்ப்பகாலம் மட்டுமின்றி, குழந்தை பிறப்பு, பாலூட்டுதல் வரையிலும் அவர்
களுக்கு அமைதியான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறு மாறுபடும் உடல்நிலையால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்களுக்கு போதுமான ஓய்வு அளித்து, முடிந்தவரை அன்றாட வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வது நல்லது.
கர்ப்பிணி பெண்களை பரிசோதனைக்காக ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்திற்கு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது முக்கியமான ஒன்று. உடன் இருப்பவர்கள், அவர்களின் உடல்நலத்தை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். கூடுமானவரை 'ஸ்கேன்' பரிசோதனையின் போதாவது கணவர் உடன் இருத்தல் அவசியம்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த, ஆரோக்கியமான மற்றும் தரமான உணவுகளை ெகாடுக்க வேண்டும். மேலும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யவும் அவர்களுக்கு உதவுவது அவசியம். மனைவியின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் அதிக நேரம் அவர்களுடன் கணவர் செலவிடுவது நல்லது. இதன்மூலம் கர்ப்பிணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்க செய்யும் ஆக்சிடோசின் சுரப்பு அதிகரித்து, பிரசவம் எளிதாக நடக்க உதவும்.
செய்யக்கூடாதவை:
கர்ப்பிணி பெண்களுடன் இருப்பவர்கள் எதிர்மறையான விஷயங்களைப் பேசி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடாது. அவர்களிடம் முடிந்த வரை நல்லதை மட்டுமே பேசி நம்பிக்கையூட்டுங்கள்.
கூடுமானவரை சண்டை, சச்சரவு போன்ற அமைதியற்ற சூழலில் கர்ப்பிணி பெண்களை ஈடுபடுத்தாதீர்கள். இதனால் அவர்களின் மனநிலை மட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்கும்.
கர்ப்பிணி பெண்களை அதிகமாக சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு தேவையான அளவு உணவை உண்டால் போதுமானது.
கர்ப்பிணிகளின் மனதை பாதிக்கும் வகையிலான திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பிறருக்கு நடந்த சிக்கலான பிரசவம், குழந்தை இறப்பு போன்ற அச்சம் தரும் விஷயங்களை கர்ப்பிணிகளிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.