எடையைக் குறைக்கும் 'பார்ட் டைம் டயட்'


எடையைக் குறைக்கும் பார்ட் டைம் டயட்
x
தினத்தந்தி 7 Aug 2022 7:00 AM IST (Updated: 7 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, கொழுப்புச் சத்து நிறைந்த, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

டல் எடையைக் குறைக்க வேண்டும், அதே நேரம் மனதுக்குப் பிடித்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். இந்த ஆசைக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் '5:2 டயட்'.

உணவு பிரியர்கள் மத்தியில் இந்த 5:2 டயட் திட்டத்துக்கு வரவேற்பு அதிகம்.

இதற்குக் காரணம், இது 'பார்ட் டைம் டயட்' என்பதுதான். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் நாம் பின்பற்றும் வழக்கமான உணவு முறையைக் கடைப்பிடிக்கலாம். மீதி இரண்டு நாட்கள் மட்டும்தான் 'டயட்' முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக எதையும் சாப்பிடாமல் பட்டினி இருக்கத் தேவையில்லை. அந்த இரண்டு நாட்கள் மட்டும், நாம் சாப்பிடும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டால் போதும்.

ஒரு நாளுக்கு உங்களுக்கு 2,000 கலோரிகள் தேவைப்படுகிறது என்றால், டயட் கடைப்பிடிக்கும் இரண்டு நாட்களில் 500 கலோரிகள் மட்டும் சாப்பிட வேண்டும். அதாவது நம் உடலுக்குத் தேவைப்படும் உணவின் அளவில் 25 சதவீதம் மட்டும் சாப்பிட்டால் போதும்.

ஒரேயடியாகப் பட்டினி கிடப்பது செரிமான உறுப்புகளின் சமநிலையைக் குலைக்கும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும் அளவோடு சாப்பிடும் இந்த வகை உணவு முறையில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

'பார்ட் டைம் டயட்' முறையைக் கடைப்பிடிப்பவர்கள், இதன்மூலம் உடல் எடை வேகமாகக் குறைகிறது என்கிறார்கள். நாம் எதிர்பார்த்த அளவுக்கு உடல் எடை குறைந்துவிட்டால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் 500 கலோரிகள் அளவுக்கு சாப்பிடலாம்.

வாரத்தில் ஐந்து நாட்கள் வழக்கமான உணவை சாப்பிடலாம் என்பதற்காக, கொழுப்புச் சத்து நிறைந்த, எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் 2,000 கலோரிகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

அதேசமயம் கல்யாணம், காது குத்து போன்ற விசேஷ நாட்களில் பிரியாணி, கோழி வறுவல், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க முடியாமல் போகலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் சத்துணவியலாளர்கள்.

சில வாரங்களுக்கு இந்த டயட்டை தொடர்ந்து கடைப்பிடித்தால் நாளடைவில் நாமே ஐந்து நாள் விருப்பச் சாப்பாடு, இரண்டு நாள் அளவுச் சாப்பாடு என்கிற நிலைக்கு இயல்பாக மாறிவிடுவோம்.

திடீரென வாரத்தில் இரண்டு நாட்களுக்குக் குறைவாக சாப்பிடுவதால் சிலருக்கு தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். ஆனால், இவை போகப் போக சரியாகிவிடும். 5:2 டயட்டைத் தொடர்ந்தால் வாழ்நாள் அதிகரிப்பதுடன் இதய நோய், அல்சைமர், புற்றுநோய் போன்றவை வரும் வாய்ப்பு குறைவு. இந்த டயட் முறையை கடைப்பிடிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.


Next Story