தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு


தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 1:30 AM (Updated: 8 Oct 2023 1:30 AM)
t-max-icont-min-icon

சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

ம்முடைய வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்றாகும். சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தை இல்லத்தரசிகள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். ஆர்வம் இருப்பவர்கள் இதை சுயதொழிலாகவும் செய்யலாம். தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பதற்கு பெரிய அளவு முதலீடோ, அதிக பணியாளர்களோ தேவை இல்லை. இதற்கான மூலப்பொருட்கள், ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

மினரல் வாட்டர் - 4 லிட்டர்

பேக்கிங் சோடா - 100 கிராம்

சிட்ரிக் அமிலம் - 50 கிராம்

வினிகர் - 250 மி.லி.

சோடியம் ஹைப்போ குளோரைடு - 500 மி.லி.

சோடியம் லாரில் ஈதர் சல்பேட் - 100 மி.லி.

லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் - 25 மி.லி.

செய்முறை:

அகலமான பிளாஸ்டிக் வாளியில் மினரல் வாட்டரை ஊற்றவும். பேக்கிங் சோடாவை சிறிது சிறிதாக அதில் போட்டு நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் சோடியம் லாரில் ஈதர் சல்பேட் திரவத்தை ஊற்றி கலக்கவும். இது தண்ணீர் நுரைப்பதற்கும், தரையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கும் உதவும். அடுத்ததாக, சிட்ரிக் அமிலத்தை சிறிது சிறிதாக இந்தக் கரைசலில் ஊற்றி கலக்கவும். இப்போது கரைசல் நுரைத்து பொங்கத் தொடங்கும். எனவே நிதானமாகவும், கவனமாகவும் கலக்க வேண்டும். நுரை அடங்கியவுடன் வினிகர், சோடியம் ஹைப்போ குளோரைடு, லெமன் கிராஸ் அரோமா எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கரைசலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை நன்றாக மூடி 24 மணி நேரத்திற்கு அப்படியே வைக்கவும். பின்பு மூடியைத் திறந்து திரவத்தை வடிகட்டி சுத்தமான, ஈரமில்லாத பாட்டில்களில் ஊற்றி வைக்கவும். தரை துடைக்கும்போது ஒரு வாளி நீருக்கு சில சொட்டுகள் வீதம் இந்த திரவத்தை ஊற்றி கலக்கினால் போதுமானது.

தரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரை செலவாகும். இது குறைந்த செலவில் தரமாக இருப்பதோடு, சுயதொழிலாக மேற்கொண்டால் லாபம் அளிக்கக்கூடியதாகவும் இருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்ப வாசனை மற்றும் நிறத்துக்கு பல்வேறு பொருட்களை கலந்துகொள்ளலாம்.


Next Story