மேட்சிங் திருமண மாலைகள்


மேட்சிங் திருமண மாலைகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 7:00 AM IST (Updated: 27 Aug 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

மேல் நோக்கி கோர்க்கப்பட்டிருக்கும் தாமரை மலர்கள் கொண்ட மாலைகள், எந்த வகையான வெளிர் நிற ஆடைக்கும் பொருந்தும். குறிப்பாக பீச் நிற லெகங்கா, வெளிர் நீல நிற புடவை மற்றும் காப்பர் மாடல் புடவைகளுக்கு, தாமரை மாலை அணிந்தால் நவீன தோற்றம் கிடைக்கும்.

ரண்டு உள்ளங்கள் ஒருங்கிணையும் திருமண விழாவில் 'மண மாலைகள்' அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாசாரங்களில் திருமணத்தின்போது மணமக்கள், மண மாலைகளை மாற்றிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.

கால மாற்றத்திற்கேற்ப தற்போது பலவகையான பூக்களையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு திருமண மாலைகள் வடிவமைக்கப்படுகின்றன. மணமக்கள் அணியும் ஆடை மற்றும் அணிகலன்களுக்கு பொருந்தும் வகையிலும், எடை குறைவாகவும் தயாரிக்கப்படும் திருமண மாலைகள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. அந்த வகையில் புடவை, லெகங்கா என மணமகள் அணியும் விதவிதமான ஆடைகளுக்கு பொருத்தமான மாலைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று பார்க்கலாம்.

சிவப்பு ரோஜா மாலை:

தங்க நிறம், மாம்பழ நிறம் மற்றும் ஆரஞ்சு நிற பட்டுப் புடவை அணியும்போது, சிவப்பு நிற பெரிய ரோஜா மற்றும் ஜிப்ஸி மலர்களை கோர்த்து நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மாலைகளை அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

வெள்ளை ரோஜா மாலை:

பீச், வெளிர் நீல நிறம் கொண்ட லெகங்கா அணியும்போது, வெள்ளை நிற ரோஜாக்கள், ஜிப்ஸி மலர்கள், பேபி பிரீத் மலர்கள் ஆகியவற்றை கோர்த்த மாலைகள் அணிந்தால் உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும். எடை குறைவாக இருப்பது இந்த வகை மாலைகளின் தனிச்சிறப்பாகும்.

இளஞ்சிவப்பு ரோஜா மாலை:

ஜிப்சி மலர்களுடன் அடர் இளஞ்சிவப்பு, வெளிர் இளஞ்சிவப்பு ரோஜா மலர்கள் கோர்த்த மாலைகளுக்கு மவுசு அதிகம். இவற்றை அணியும்போது அதே நிறத்தில் ஆடைகள் அணிந்தாலும் பொருத்தமாக இருக்கும். வெளிர் நீல நிற புடவை அல்லது வெளிர் நீல நிற லெகங்கா அணிகையில், இவ்வகை மாலைகள் அணிந்தால் டிரெண்டிங் லுக் கிடைக்கும்.

ரோஜா இதழ்கள் கொண்ட வெள்ளை மாலை:

பிங்க் மற்றும் சாம்பல் நிற லெகங்கா, ஆரஞ்சு நிற புடவை ஆகியவை அணியும்போது, ரோஜா இதழ்களுடன் மல்லிகை மொட்டுக்கள் கோர்த்த மாலை அணியலாம். இதனால் உங்கள் தோற்றம் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.

நெட் மாலை:

மல்லிகை மொட்டு வலையுடன் கூடிய ரோஜா இதழ்கள் கொண்ட எவர்கிரீன் மாடல் மாலைகள், சிவப்பு, ஊதா, ரோஸ், பச்சை மற்றும் தங்க நிறம் என அனைத்து நிற ஆடைகளுக்கும் கச்சிதமாக பொருந்தும்.

தாமரை மாலை:

மேல் நோக்கி கோர்க்கப்பட்டிருக்கும் தாமரை மலர்கள் கொண்ட மாலைகள், எந்த வகையான வெளிர் நிற ஆடைக்கும் பொருந்தும். குறிப்பாக பீச் நிற லெகங்கா, வெளிர் நீல நிற புடவை மற்றும் காப்பர் மாடல் புடவைகளுக்கு, தாமரை மாலை அணிந்தால் நவீன தோற்றம் கிடைக்கும்.

ஜோதிகா மாலை:

சிவப்பு நிற புடவை அணியும்போது பாரம்பரிய மாலைகள் அணிந்தால் அழகாக இருக்கும். குறிப்பாக ரோஜா இதழ்கள், தங்க நிற பட்டுத் துணிகள் மற்றும் பச்சை இலைகள் வைத்து கட்டப்படும் 'ஜோதிகா மாலை' பொருத்தமாக இருக்கும்.


Next Story