காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதக்க பட்டியல் ; இந்தியாவுக்கு ஒரேநாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம்


தினத்தந்தி 28 July 2022 4:04 PM IST (Updated: 31 July 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். மொத்தம் அவர் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் அரங்கில் நடைபெறும்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதற்காக பேட்மிண்டன், ஹாக்கி, கிரிக்கெட், பளு தூக்குதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்த முறை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சனு, பி.வி. சிந்து, இந்திய ஹாக்கி அணி, லவ்லினா, உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நிகாத் ஜரீன் போன்றோர் இந்த காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறுகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018 வாக்கில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகளம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம் என வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 26 தங்கங்களை வென்று சாதனை படைத்தது இந்தியா.

அதோடு 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கமும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வென்றிருந்தனர். இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கங்களை இந்தியா வெல்லும் என நம்பப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் பொதுவாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, 2000ஆம் ஆண்டிலிருந்து பதக்க பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது.

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். மொத்தம் அவர் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி கலந்துகொண்டார். அவர் மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்

காமல்வெல்த் போட்டியின் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு.

காமல்வெல்த் போட்டியின் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி சொரோகைபம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார் பிந்த்யாராணி தேவி.

காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.

காமல்வெல்த் போட்டியின் ஆண்கள் பளு தூக்குதல் 67 கிலோ எடை பிரிவில் 19 வயதே ஆன இந்தியாவின் இளம் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

நாடுகள்

தங்கம்

வெள்ளி

வெண்கலம்

மொத்தம்

இந்தியா

2

2

1

5

அங்குல்லியா

0

0

0

0

ஆன்டிகுவா - பார்புடா

0

0

0

0

ஆஸ்திரேலியா

13

8

11

32

பகாமாஸ்

0

0

0

0

வங்காள தேசம்

0

0

0

0

பார்படாஸ்

0

0

0

0

பெலிஸ்

0

0

0

0

பெர்முடா

1

0

0

1

போட்ஸ்வானா

0

0

0

0

விர்ஜின் தீவுகள்

0

0

0

0

புருனே

0

0

0

0

கேமரூன்

0

0

0

0

கனடா

0

0

0

0

கனடா

3

3

5

11

குக் தீவுகள்

0

0

0

0

சைப்ரஸ்

0

0

0

0

டொமினிகா

0

0

0

0

இங்கிலாந்து

5

12

4

21

சுவாதினி

0

0

0

0

பால்க்லாந்து தீவுகள்

0

0

0

0

பிஜி

0

0

0

0

கானா

0

0

0

0

ஜிப்ரால்டர்

0

0

0

0

கிரெனடா

0

0

0

0

குர்ன்சி

0

0

0

0

கயானா

0

0

0

0

ஐல் ஆப் மேன்

0

0

0

0

ஜமைக்கா

0

0

0

0

ஜெர்சி

0

0

0

0

கென்யா

0

1

1

2

கிரிபதி

0

0

0

0

லெசோதோ

0

0

0

0

மலாவி

0

0

0

0

மலேசியா

2

0

1

3

மாலத்தீவுகள்

0

0

0

0

மால்டா

0

0

0

0

மொரீசியஸ்

0

0

0

0

மாண்ட்செராட்

0

0

0

0

மொசாம்பிக்

0

0

0

0

நமீபியா

0

0

1

1

நவ்ரு

0

0

0

0

நியூசிலாந்து

7

4

2

13

நைஜீரியா

0

0

0

0

நியு

0

0

0

0

நார்போல்க் தீவு

0

0

0

0

வட அயர்லாந்து

0

0

0

0

பாகிஸ்தான்

0

0

0

0

பப்புவா நியூ கினியா

0

1

0

1

ருவாண்டா

0

0

0

0

சமோவா

1

1

4

6

ஸ்காட்லாந்து

2

4

6

12

சீஷெல்ஸ்

0

0

0

0

சியரா லியோன்

0

0

0

0

சிங்கப்பூர்

0

0

0

0

சாலமன் தீவுகள்

0

0

0

0

தென்னாப்பிரிக்கா

2

0

0

2

இலங்கை

0

0

1

1

செயின்ட் ஹெலினா

0

0

0

0

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்

0

0

0

0

செயின்ட் லூசியா

0

0

0

0

செயின்ட் வின்சென்ட் - கிரெனடைன்ஸ்

0

0

0

0

தான்சானியா

0

1

0

1

காம்பியா

0

0

0

0

டோங்கா

0

0

0

0

டிரினிடாட் மற்றும் டொபாகோ

0

0

0

0

டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்

0

0

0

0

துவாலு

0

0

0

0

உகாண்டா

1

0

0

1

வனுவாடு

0

0

0

0



Next Story