காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா...!


காமன்வெல்த் போட்டி: டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா...!
x

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டிகு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.


Next Story