ஓ.டி.டி.யில் வெளியானது 'தென் சென்னை' திரைப்படம்
![ஓ.டி.டி.யில் வெளியானது தென் சென்னை திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது தென் சென்னை திரைப்படம்](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38403444-1a.webp)
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'தென் சென்னை' படம் ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது.
தென் சென்னை பகுதியை மையமாக கொண்டு விறுவிறுப்பான கதையம்சத்தில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் "தென் சென்னை". அறிமுக இயக்குனர் ரங்க நாதன் இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல முயற்சிகளில் இறங்கியுள்ளார். கதாநாயகியாக ரியா நடித்துள்ளார்.
"டாடா" திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜென் மார்டின், இந்த படத்திற்க்கு பின்னனி இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இதில் வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குறைந்த அளவு திரையரங்குகளில் வெளிவந்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. கதை, திரைக்கதை, படத்தில் அனைவரின் நடிப்பு ஆகியவை பாராட்டப்பட்டன. இந்தநிலையில், இப்படம் டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.