ஓ.டி.டி.யில் வெளியாகும் ஷாலினி ஹர்ஷ்வாலின் 'அவுட் ஆப் எ ஜாம்' ஆவணப்படம்


பிரபல விளம்பர திரைப்படத் தயாரிப்பாளர் ஷாலினி ஹர்ஷ்வால் தயாரித்த 'அவுட் ஆப் எ ஜாம்' என்ற ஆவணப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

பிரபல விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஷாலினி ஹர்ஷ்வால். இவர் தற்போது, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள புய்ரா என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு தனித்துவமான கதையை வழங்கும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இதற்கு 'அவுட் ஆப் எ ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமமான புய்ராவில் உள்ள அனைத்து பெண்களும் ஜாம் தயாரிக்கும் தொழிலை செய்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த கிராமம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எப்படி அடைகிறது என்பதை பற்றி கூறும் வகையில் இந்த ஆவணப்படம் அமைந்துள்ளது.

புய்ரா கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட மூன்று பெண்களின் எழுச்சியூட்டும் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்தநிலையில், ஆவணப்படத்தின் டிரெய்லர் நேற்று டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 'அவுட் ஆப் எ ஜாம்' ஆவணப்படம் வருகிற 9-ந் தேதி ஓபன் தியேட்டர் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


Next Story