பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பிய பின்...ஓடிடியில் மனதை கவர வரும் ''சயாரா''...


Saiyaara OTT release: When and where to watch Ahaan Panday-Aneet Padda film
x
தினத்தந்தி 12 Aug 2025 6:15 PM IST (Updated: 12 Aug 2025 6:42 PM IST)
t-max-icont-min-icon

இத்திரைப்படம் இதுவரை இந்தியாவில் ரூ. 319.85 கோடியும் உலகளவில் ரூ. 500 கோடிக்கு மேலும் வசூலித்திருக்கிறது.

சென்னை,

கடந்த மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மோஹித் சூரியின் ''சயாரா'' திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது.

அதன்படி, இப்படம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதுபோல் தெரிகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், படத்தின் காஸ்டிங் இயக்குனர் ஷானூ சர்மாவால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நெட்பிளிக்ஸில் சயாரா வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்களும் இதனை விரைவில் உறுதிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடித்த இந்த காதல் நாடகம், பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிள்ளது. இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் இதுவரை இந்தியாவில் ரூ. 319.85 கோடியும் உலகளவில் ரூ. 500 கோடிக்கு மேலும் வசூலித்திருக்கிறது.

1 More update

Next Story