'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு
ஹைபர் லிங்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், டிரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படம் ஹைபர் லிங்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. நான்கு வெவ்வேறு சூழலில், வெவ்வேறு நிலைகளிலுள்ள மனிதர்களின் கைகளில் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன ஆகும்? என்பதே இப்படத்தின் கதை. திரையரங்குகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் வருகிற 17-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.