ஓ.டி.டி.யில் வெளியான 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம்


ஓ.டி.டி.யில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படம்
x

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி.யில் வந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

'கோலி சோடா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் 'கோலி சோடா 2' திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் 'மழை பிடிக்காத மனிதன்'.

ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படமானது ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகியது.

'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் தற்பொழுது ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது . இப்படம் ஓ.டி.டி தளமான அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி.யில் வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story