புஷ்பா 2 தி ரூலின் இந்த சாதனையை முறியடித்த யாஷின் டாக்சிக்
புஷ்பா 2 தி ரூலின் ஒரு சாதனையை யாஷ் நடித்து வரும் டாக்சிக் முறியடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை,
இயக்குனர் ராஜவவுலியின் மாபெரும் படைப்பான பாகுபலி படம் பல சாதனைகளை படைத்தது. அது நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்தது. அந்த சாதனைகளை முறியடிப்பது கடினம் என்று பலர் நினைத்தநிலையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அல்லு அர்ஜுனின் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னர் புஷ்பா 2 தி ரூல் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, அமீர் கானின் தங்கல் படைத்த சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், புஷ்பா 2 தி ரூலின் ஒரு சாதனையை யாஷ் நடித்து வரும் டாக்சிக் முறியடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் டாக்சிக் படக்குழு யாஷின் பிறந்தநாள் அன்று கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ யூடியூபில் வெறும் 24 மணி நேரத்தில் 36 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இதற்கு முன்பு புஷ்பா 2 தி ரூல் கிளிம்ப்ஸ் 27.67 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்த சாதனை செய்திருந்தது. இதனையடுத்து யாஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதன் மூலம் புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையையும் யாஷின் டாக்சிக் முறியடிக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.