'ராமாயணம்' - படப்பிடிப்பை துவங்கிய யாஷ்


Yash begins shooting for Ramayana’s war episode
x

'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.

மும்பை,

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் 'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், நடிகை ஷோபனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தநிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்கி இருக்கிறது.

இதில், ராவணனாக நடிக்கும் யாஷ் இணைந்திருக்கிறார். 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

1 More update

Next Story