நடிகர் நாகார்ஜுனா மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா?
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் நாகார்ஜுனா
ஐதராபாத்,
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் பிரபல நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, நாக சைதன்யா, அகில் என 2 மகன்கள் உள்ளனர். இருவருமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
அதன்படி, அகில் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 'ஏஜெண்ட்'. ராமபிரம்மம் சுங்கரா தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தை இயக்குனர் முரளி கிஷோர் இயக்க உள்ளார். மேலும், அகில் அகினேனியின் தந்தை நாகார்ஜுனா இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story